Trending News

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)  இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

Related posts

යුක්‍රේන ජනාධිපතිගේ උපන් ගමට මිසයිල පුහාර

Editor O

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Mohamed Dilsad

Lebanon protests: Mass revolt continues as PM ‘agrees reforms’

Mohamed Dilsad

Leave a Comment