(UTV|COLOMBO) சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான தாக்கம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால், நேற்றைய தினம் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, 13 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பகுதிக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் எல்.எஸ். பத்திநாயக்க, அந்தப் பதவியிலிருந்து, மேம்படுத்தல் துறை பிரதி காவல்துறைமா அதிபராகவும்;, மேம்படுத்தல் துறை பிரதி காவல்துறைமா அதிபராக இருந்த எல்.ஏ.எஸ். ப்ரியந்த, கொழும்பு பகுதிக்கு பொறுப்பான காவல்துறைமா அதிபராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.
இத்துடன், மேல் மாகாண வட பகுதி பிரதி காவல்துறைமா அதிபர் ரீ.எம்.டபிள்யு.டீ.தேசபந்துவை புத்தளம் பகுதி பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கவும் காவல்துறை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக மேலும், 10 காவல்துறை அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.