Trending News

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு வியட்னாம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு

Mohamed Dilsad

நான்கு வீதத்தால் அதிகரித்த பஸ் கட்டணம்

Mohamed Dilsad

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment