Trending News

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சுமத்தி, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது எனினும், நீதிபதி விஜித் மலல்கொட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணைகளை ஜூலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக, நீதிபதிகளான  சிசிர டீ ஆப்ரு, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா ஆகியோர் இன்று தீர்மானித்துள்ளது.

 

Related posts

Showers expected due to low-pressure in Bay of Bengal – Met. Department

Mohamed Dilsad

සුළං බලශක්ති ව්‍යාපෘතියෙන් අදානි ඉවත්වෙයි ද..?

Editor O

‘மதூஷ்’ தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாராளுமன்றத்தில் கூறிய கதை…

Mohamed Dilsad

Leave a Comment