Trending News

ஈஸியாக சில்லி சிக்கன் செய்வது எப்படி?

நீங்கள் எவ்வளவோ உணவு வகைகளை சாப்பிட்டு மனதளவில் உணர்ந்திருந்தாலும்…இந்த சிக்கன் சமையல் வித்தியாசமான ஒன்று என்பதே உண்மை.

இந்த சமையலுக்கு தேவையான பொருட்களையும், வழிமுறைகளாக

தேவையான பொருட்கள்:
போன் லெஸ் சிக்கன் – 350 கிராம் (துண்டுகளாக நறுக்கப்பட்டது)
சோள மாவு – ½ கப் முட்டை – 1 (உடைக்கப்பட்டது)
பூண்டு பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
நன்றாக வறுக்க தேவையான எண்ணெய் சுவைக்கு தேவைக்கேற்ப உப்பு வெங்காயம் – 2 கப் (நன்றாக நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நன்றாக நறுக்கப்பட்டது, விதைகள் நீக்கப்பட்டது)
வினிகர் – 2 டீ ஸ்பூன்
தண்ணீர் தேவைக்கேற்ப…

செய்முறை

சோள மாவு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, முட்டை, தண்ணீர் ஆகியவற்றை கரைத்து கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் பொருள்களுடன் சிக்கன் துண்டுகளை நன்றாக தூவ வேண்டும். ஒரு ஆழமான அடிப்பாகத்தை கொண்ட  பாத்திரம் அடுப்பில் வைத்து, எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி வறுக்கவேண்டும். பின்னர் எண்ணெயில் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்…

அதன் பின்னர் சிக்கன் துண்டுகளை எடுத்துவிட்டு எக்ஷ்ட்ரா இருக்கும் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தும் துணியை கொண்டு ஊற வைக்க வேண்டும்.

மறுபடியும் 2 டீ ஸ்பூன்கள் எண்ணெயை எடுத்துகொண்டு அதனை நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை தங்க பழுப்பு நிறம் வரும்வரை நன்றாக வறுத்து…பின்னர் பச்சை மிளகாயையும் வறுத்து மிருதுவாக்க வேண்டும்.

அதன் பிறகு, சோயா சாஸ், வினிகர், மற்றும் வறுக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை  பாத்திரத்தில்  போட்டு நன்றாக புரட்டி போட வேண்டும். உங்களுக்கு க்ரேவி வேண்டுமென்றால்… தண்ணீரை அதிகம் சேர்க்க மறந்துவிடாதீர்கள். அப்பொழுது தான் நிலையான கலவை தன்மையை நீங்கள் பெற முடியும்.

இந்த முறைகளை நீங்கள் செய்து முடிக்க… சுவையான போன்லெஸ் சில்லி சிக்கன் ரெடி!!

 

 

Related posts

Russia agrees to lift ban on tea imports from Sri Lanka

Mohamed Dilsad

One killed, three missing in earth slip in Nuwara Eliya

Mohamed Dilsad

Lorry seized in Nayakakanda

Mohamed Dilsad

Leave a Comment