Trending News

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் 04ம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(28) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு துறையின் பிரதானியான ஓய்வுபெற்ற சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் தெரிவுக்குழுவில் சாட்சியங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 4 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி மற்றும் அரச புலனாய்வு துறையின் பிரதானி ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

Paramount gets $1bn Chinese funding

Mohamed Dilsad

හිටපු ඇමති මනූෂගේ පෞද්ගලික කාර්යය මණ්ඩලයේ සිටි අයෙකු අත්අඩංගුවට

Editor O

Arrest warrant on Uduwe Dhammaloka Thera

Mohamed Dilsad

Leave a Comment