Trending News

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

(UTV|COLOMBO)  தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் தேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைப்பாடுகள் புதிய தேசிய அடையாள அட்டையின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் புகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்றவற்றை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இருப்பினும் தேசிய அடையாள அட்டை தொடர்ந்தும் நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டது. எதிர்காலத்தில் டீ.என்.ஏ தரவு அல்லது கைவிரல் அடையாளம் போன்றவை இயற்கை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் இவற்றில் கை விரல் மாத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

இன்று(23) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை

Mohamed Dilsad

2018 Grade 5 Scholarships results relesed

Mohamed Dilsad

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

Mohamed Dilsad

Leave a Comment