பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தின் பேர்கிங்ஹம் அரண்மனையில் அமெரிக்க ஜனாதிபதிக்கான அரச விருந்துபசாரம் இடம்பெற்றது.
அமெரிக்காவும் பிரிட்டனும் தத்தமது நாடுகளின் பிரஜைகளது பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் பல தசாப்த காலமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டு உறுதியான நற்புறவையும் பேணி வருவதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய மகாராணி எலிஸபெத் கூறினார்.
உலக வரலாற்றில் மிகப் பெரிய கடல் மார்க்கமான ஊடுறுவல் என வர்ணிக்கப்படும் இரண்டாம் உலகப் போர் நிகழ்வான கூட்டுப் படைகளின் நோர்மண்டி தரையிறக்கம் 1944 ஜுன் 6ம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு இடம்பெற்ற 75வது வருடத்தை நினைவு கூறும் வகையிலும் அமெரிக்க ஜனாதிபதியின் தற்போதைய பிரிட்டிஷ் விஜயம் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
டிரம்ப் தனது பிரிட்டிஷ் விஜயத்தின் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்த டுவிட்டரில் லண்டன் நகர மேயர் சாதிக் கானை சாடி கருத்து வெளியிட்டிருந்தார். டிரம்ப் பிரிட்டிஷ் வர முன் அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கத் தேவையில்லை என்று லண்டன் மேயர் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அவர் சாதிக்கானை சாடி உள்ளார்.