Trending News

மற்றவர்களுக்குரிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) மற்றவர்களுக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளதுடன் இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

 

Related posts

ஒரு கோடி பெறுமதியான ஹேரோயினுடன் நபரொருவர் கைது

Mohamed Dilsad

Army to return 650 acres of land in North to original owners

Mohamed Dilsad

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

Mohamed Dilsad

Leave a Comment