Trending News

சூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

போப் பிரான்சிஸ் சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய அதிபராக பதவியேற்ற இராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அந்நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கிருஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரன்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ரோம் நகர் புனித பிட்டர் சதுர்கத்தில் போது மக்களுடனான வார பிராத்தனை நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ் ‘சூடான் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 61 பேர் பலியாகினர் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மேலும் இந்த பிரச்சனையினை பேச்சுவார்த்தை மூலமாக உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

Related posts

President given grand welcome in Canberra

Mohamed Dilsad

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

Mohamed Dilsad

தான்சானியா நாட்டில் படகு கவிழ்ந்து விபத்தில் 44 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment