Trending News

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கில் இன்றைய தினம் அவ்வப்போது  மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிவித்துள்ளது.

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஓரளவு மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

Sri Lanka Army releases another land area of 133.34 acres to civil land owners

Mohamed Dilsad

என் அப்பா இதை தான் கற்று தந்தார்

Mohamed Dilsad

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

Mohamed Dilsad

Leave a Comment