(UTV|COLOMBO) சுமார் 8 ஆயிரம் வெளிநாட்டவர்கள் நுழைவு அனுமதி காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நாடுகடத்த உள்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கு தேவையான நிதியினை பெறும் நோக்கில் உள்துறை அமைச்சு, அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சட்டவிரோதமாக இலங்கையில் தங்கிருந்த 7ஆயிரத்து 900 வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இங்குள்ள கட்டட நிர்மானப் பணிகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றுபவர்கள் என குடிவரவு குடியகழ்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.