Trending News

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

(UTV|COLOMBO)  நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் இன்றைய தினம் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மேல் மாகாணத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடுவதுடன், வடமேல் மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

Hand grenade thrown at SLMC premises

Mohamed Dilsad

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

Mohamed Dilsad

President renews essential service order for railways

Mohamed Dilsad

Leave a Comment