Trending News

27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள்

(UTV|COLOMBO) பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.

இதன்படி ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

 

 

 

Related posts

Fidow fires Samoa to bruising win over Russia

Mohamed Dilsad

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அநீதி ஏற்படாது…

Mohamed Dilsad

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment