Trending News

தொழிநுட்ப தொல்பொருள் நிலையமும் நூலகமும் ஜனாதிபதியினால் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(03) பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

நவீன யுகத்திற்கு பொருத்தமான நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்திடமிருந்த பண்டைய தொழிநுட்பத்தை பற்றி இன்றுள்ள மக்களுக்கு விளக்கும் வகையில் இந்த தொல்பொருள் நிலையம் அமையப் பெற்றிருப்பதுடன், இது அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய திட்டமாகும்.

புத்தாக்க கூடம் சீகிரிய, ஜேத்தவன ஆகிய பண்டைய இடங்களின் முப்பரிமாண காட்சிகளைக் கொண்டுள்ளதுடன், வெளிநாட்டு தொல்பொருள் நிலையங்களைப்போன்று இந்த தொல்பொருள் நிலையங்களில் நேரடியாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய வகையில் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணகருவின் பேரில் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்டைய தொழிநுட்ப தொல்பொருள் நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 900 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்

Mohamed Dilsad

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

Mohamed Dilsad

Leave a Comment