Trending News

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 07 விக்கெட்களால் வெற்றி

(UTV|COLOMBO) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

இதனிடையே உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரொன்றில் அதிக சதங்களை விளாசிய வீரராக இந்தியாவின் ரோஹித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.

லீட்ஸில் ​நேற்று(06) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 55 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்கான 265 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இந்தியா அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு இது கடைசி லீக் போட்டி என்பதுடன் இத்துடன் தொடரிலிருந்து வெளியேறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மென்சஸ்ட்டரில் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா அணு 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 315 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Related posts

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

ஐ.தே.க அரசியல் கட்சி அல்ல- மஹிந்த

Mohamed Dilsad

Alaphilippe wins stage 10 of Tour de France

Mohamed Dilsad

Leave a Comment