Trending News

நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் எம்பிக்கள் வலியுறுத்து!

 

(UTV|COLOMBO)-  முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள்,நெருக்கடிகள் தொடர்பில் ஜனாபதிக்கு எடுத்துக் கூறிய முஸ்லிம் எம் பிக்கள் நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த இச்சந்திப்புக் குறித்து விளக்கிய அவர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதிக்குள்ள பொறுப்பாகும்.

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கையில் கண்டியில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஞானசாரர் ஆற்றிய உரை முஸ்லிம் சமூகத்தையே நிந்தித்துள்ளது.அரபு எழுத்துக்கள், குர்ஆன் பிரதிகளை வைத்திருந்தமைக்காக அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யவும் இந்தச் சட்டத்தையே பாவித்துள்ளனர்.

எனவே அவசரகாலச் சட்டத்தை நீக்கி கெடுபிடிகளை நிறுத்த வேண்டும். டொக்டர் ஷாபி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என சி ஐ டி யினர் ஆதாரங்களுடன் நிரூபித்தும் அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது அநீதியாகும் என்பதையும் ஜனாதிபதிக்கு முஸ்லிம் எம்பிக்கள் குழு எடுத்துக் கூறியது.

இவற்றை நன்கு செவிமடுத்த ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான போக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த சந்ததிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா, எம்.எஸ்.அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் பைசல் காசீம், அலிசாஹிர் மௌலான, எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

IRRI and Sri Lanka sign a 5-year action plan

Mohamed Dilsad

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்

Mohamed Dilsad

Korean Government hands over humanitarian assistance for flood victims

Mohamed Dilsad

Leave a Comment