Trending News

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை

(UTV|COLOMBO)-  நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீர்த்திருத்தப்பட்ட விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யாத, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பெற்றோல் 92 ஒக்டேன் விலை 2 ரூபாவாலும், ஒக்டேன் 95 இன் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டதுடன், சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. எனினும் சில எரிபொருள் விற்பனை நிலையங்கள் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜீ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

Mohamed Dilsad

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

Mohamed Dilsad

ඉන්දන මිල සංශෝධනය අද

Editor O

Leave a Comment