Trending News

மாணவர்களது புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்

(UTVNEWS | COLOMBO) – புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்ட ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 – தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் பாடப்புத்தகங்கள் மூன்று மாத்திரம் அச்சிடப்படவுள்ளது. இந்த பாடப்புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்வாங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் பாடப்புத்தக எடைகளின் சுமையை பெருமளவு குறைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பக செலவு, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

-அரசாங்கத் தகவல் திணைக்களம் –

Related posts

Corruption claim deepens Bangladesh cricket crisis

Mohamed Dilsad

வில்பத்து – தேர்தல் காலங்களில் நாட்டின் பிரச்சினையினை மறக்கடிக்கும் ஒரு பிரச்சாரம் – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

Mohamed Dilsad

Dengue forces 3 day closure of 66 schools in Kinniya

Mohamed Dilsad

Leave a Comment