(UTVNEWS | COLOMBO) – Meningio cocoal Meningities என்ற மூளைக்காய்ச்சலில் உயிரிழந்த 31 வயதான இளைஞனின் உடலை உடனடியாக அடக்கம் செய்யுமாறு கொழும்பு நகர அவசர வைத்திய பரிசோதகர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார்.
ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் கொழும்பு நகர அவசர வைத்திய பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
Meningio cocoal Meningities என்ற பக்ரீரியா ஒன்றின் ஊடாக இந்த நோய் ஏற்படுவதாகவும், இதனால் சிறிய அளவேனும் அருகில் உள்ளவருக்கு பரவ கூடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த 8 மாதங்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய தினமே அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான ஒருவரும், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 மாத குழந்தை ஒன்றும், கொழும்பு பெண் ஒருவரும் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.