Trending News

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – ரிஷாத் பதியுதீன்

(UTVNEWS | COLOMBO) – கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இதேவேளை, அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றால், மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள றிசாட் பதியுதீன், நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தொரிவித்துள்ளார்.

Related posts

Vesak Pandal collapses in Kiribathgoda

Mohamed Dilsad

கம்மூரி சூறாவளி – 2 இலட்சம் பேர் பாதிப்பு

Mohamed Dilsad

Sri Lanka to receive USD 1,340 million assistance from World Bank

Mohamed Dilsad

Leave a Comment