Trending News

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

(UTVNEWS | COLOMBO) -சிறிலங்கன் விமான சேவை www.srilankan.com இணையத்தளத்தின் மூலம் நேரடியாக விமான பயண சீட்டுகளை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு (Srilankan Travel Fest ) என்ற கொடுப்பனவு ஊடாக வர்த்தக பயண விமான பயண சீட்டுக்கு 40 சதவீத விஷேட கொடுப்பனவின் கீழ் விற்பனை செய்யப்படும்.

இதன் மூலம் உலகம் முழுவதிலும் 35 நாடுகளுக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சிக்கன வகுப்பு விமான பயண சீட்டுக்காக 25 சதவீத விஷேட கொடுப்பனவை வழங்குவதற்கு சிறிலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் வர்த்தக பயணசீட்டை ஒதுக்கீடு செய்யும் விமான பயணிகளுக்கு இந்த கொடுப்பனவு கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் செல்லுபடியாகும்.

இவர்களுக்கு இக் காலப்பகுதியில் சுதந்திரமாக எந்த நேரத்திலும் விமான பயணங்களில் ஈடுபட முடியும். ஸ்ரீலங்கன் விமான சேவையில் சிக்கன வகுப்பு விஷேட கொடுப்பனவு 9 நாட்களுக்கு மாத்திரம் செல்லுபடியானதாகும்.

ஸ்ரீலங்கன் விமான சேவை சிக்கன வகுப்பு விஷேட கொடுப்பனவு சலுகை 20-28 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 48 நாடுகளுக்கு 111 விமான சேவைகளை மேற்கொள்கின்றது.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை

Mohamed Dilsad

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

UNP’s Vadivel Suresh pledges support to Mahinda Rajapaksa

Mohamed Dilsad

Leave a Comment