Trending News

பொதுஜன பெரமுன அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

(UTVNEWS | COLOMBO) -ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய, ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சி ஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு விஜரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

Related posts

Ranjith De Zoysa passes away

Mohamed Dilsad

Permanent solution to waste disposal within a year

Mohamed Dilsad

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

Mohamed Dilsad

Leave a Comment