Trending News

கோத்தா பக்கம் சாயும் சந்திரிக்கா

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கையாளப்படுவதாகவும் கட்சியைப் புதுப்பிக்கப் போவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.

கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குவதாக அறிவித்த சந்திரிக்கா, தனக்கும் தனது பணியாளர்களுக்கும், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் உடனடியாக ஒரு தனி செயலகம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவையும், சந்திரிக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் அதற்கு தலை சாய்ப்பாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related posts

நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலம் மாகாண சபைகளின் நிவைப்பாடு – சபாநாயகர் சபையில் அறிவிப்பு

Mohamed Dilsad

நாகசேனை நகர பொது மலசலகூடம் உடப்பு தனியார் நிலப்பகுதியை ஆக்கிமிக்க முயற்சிப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு

Mohamed Dilsad

Archbishop requests Govt. to close all liquor shops in Negombo

Mohamed Dilsad

Leave a Comment