Trending News

பூச்சியத்தில் ஆரம்பித்த திமுத்தின் வெற்றிப்பயணம்

 

(M.Jusair)

(UTVNEWS|COLOMBO) -நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு திமுத் கருணாரத்ன தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்கையை ஆரம்பித்தார்.

அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பூச்சியத்துடன் ஆட்டம் இழந்தார். இரண்டாது இன்னிங்சில் 60 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து. இலங்கை அணியை வெற்றி வரை அழைத்து சென்றார்.

 

அந்த போட்டியின் பின்னர் கடந்த ஏழு வருடங்களாக நியூஸிலாந்து அணியானது, இலங்கைக்கு டெஸ்ட் தொடர் ஒன்றிலும் பங்கேற்கவில்லை. 2012க்கு பின்னர் தாம் பங்கு கொண்டுள்ள இந்த தொடருக்கு தலைமை வகிப்பது அன்று பூச்சியத்துடன் நடையை கட்டிய திமுத் கருணாரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை டெஸ்ட் அணி தலைவராக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்ற வாய்ப்புக் கிட்டியது. இது தென்னாபிரிக்கா மண்ணில் வைத்து ஒரு ஆசிய அணி தென்னாபிரிக்காவை முழுமையாக வெற்றி கொண்ட முதல் சந்தர்ப்பமாக அமைந்தது.

கடந்த 18ம் திகதி காலியில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் போட்டியில், தனது சொந்த மண்ணில் திமுத் தலைமை தாங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார். திமுத் மேலும் தனது தலைமையின் கீழ் இடம் பெற்ற மூன்று டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று
100% சதவீதம் வெற்றியை நிரூபித்தார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளியிப்படுத்தாத போதும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி நான்காம் இன்னிங்சில் பாரிய வெற்றியிலக்கான 268 ஓட்டங்களை பெறுவதற்கு தனது பங்குக்கு 128 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இவ்வாறு ஒரு வெற்றியிலக்கை எட்டிப்பிடிப்பதற்கு இவரின் பங்களிப்பு அளப்பரியது.

இந்த வெற்றி நான்காம் இன்னிங்சில் ஒரு அணிக்கு எதிராக துரத்தி வெற்றி கொண்ட பாரிய வெற்றி இலக்கு என்பதுடன். இது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

Mohamed Dilsad

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment