Trending News

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

(UTVNEWS|COLOMBO) -கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சமர்பித்துள்ள சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று(05) அறிவிக்கவுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுடன் தொடர்புடைய சத்தியக் கடதாசியில் தனக்கு எதிராக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று தெரிவித்திருந்தார்.

குறித்த சத்தியக் கடதாசியை உடனடியாக நீக்கிகொள்வதற்கு உத்தரவிடுமாறு சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சட்ட மா அதிபரின் கோரிக்கை தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

வாய்வழி மூலமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை இன்று எழுத்து மூல சமர்ப்பணமாக நீதிமன்றத்திலும், கட்டாய விடுமுறையை பெற்றுள்ள பொலிஸ்மா அதிபரின் சட்டத்தரணிகளுக்கும் வழங்குமாறு உயர் நீதிமன்றத்திடம் நேற்று கோரியிருந்தது.

Related posts

Bus fares increased from midnight tomorrow

Mohamed Dilsad

Lankan gets 12-year jail term for fake bomb threat on Malaysian plane

Mohamed Dilsad

New chairman appointed to BOC

Mohamed Dilsad

Leave a Comment