Trending News

ஆவணங்கள் கிடைத்ததும் அர்ஜுன் தொடர்பில் சிங்கப்பூர் தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – சிங்கப்பூர் பிரஜையான இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்துவது தொடர்பிலான தீர்மானத்தினை இலங்கை அரசினால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததும் எடுக்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கையில், அர்ஜுன் மஹேந்திரனை நாடுகடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் சட்டத்திற்கு அமைய இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி ஊழலுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு ஒப்படைக்கும் விண்ணப்பத்தை சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு அதிகாரபூர்வமாக கையளித்ததாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் விசேட தேடுதல்

Mohamed Dilsad

Update – கொட்டகலை பகுதியில் பஸ் விபத்து

Mohamed Dilsad

நுவரெலியா – ஐஸ்கட்டி போட்டி

Mohamed Dilsad

Leave a Comment