Trending News

கஞ்சிப்பானை இம்ரானை 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

(UTVNEWS|COLOMBO) – கஞ்சிப்பானை இம்ரானை எதிர்வரும் திங்கட்கிழமை(09) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(05) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக நீதிமன்றில் இவ்வாறு முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் 20 கிராம் ஹெரோயினுடன் வாழைத்தோட்டம் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பொழுது சுற்றிவளைப்பில் ஈடுப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து தொலைபேசி ஊடாக அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Related posts

McConaughey, Hathaway Angry Over “Serenity”

Mohamed Dilsad

மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம்…

Mohamed Dilsad

01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரிச்சுமைகள்

Mohamed Dilsad

Leave a Comment