Trending News

பாணின் விலையானது குறைவு

(UTVNEWS | COLOMBO) – பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்று(12) நள்ளிரவு முதல் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்திருந்தது.

Related posts

சுமார் 69 சதவீதமான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை என்ன செய்துள்ளார் [VIDEO]

Mohamed Dilsad

கிழக்கில் முதல்வரின் முயற்சி வெற்றி-முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம்

Mohamed Dilsad

Hit and run accident kills mother of two

Mohamed Dilsad

Leave a Comment