Trending News

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி – அமைச்சர் ரிஷாட்.

(UTVNEWS|COLOMBO) – ‘உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எங்கள் தொழில்துறையை நான் அழைக்கிறேன்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

‘லங்காபக் ‘; (Lankapak) சர்வதேச கண்காட்சி தொடரின் 38 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துககொண்டு உரையாற்றுகைளிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற (14) இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்தூ,திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி இராஜங்க அமைச்சர் புத்திக்க பத்திரன,ஆசிய பொதியிடல் துறை கூட்டமைப்பின் தலைவர் ரோஹன் விக்டோரியா,இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் வர்த்தக பிரதிநிதி ராகேஷ் ஷாங்கிராய்,மற்றும் இலங்கை பொதியிடல் துறை நிறுவனத்தின் தலைவர் அனுராதா ஜெயசின்ஹா ஆகியோர்; கலந்துககொண்டனர்.;

கொழும்பில் நடைபெறவிருக்கும் மிக முக்கியமான தொழில் கண்காட்சிகளில் ஒன்றான ‘லங்காபக் ‘; தொடரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சு ஆதரித்துள்ளதுடன், ஐந்து பொதியிடல்துறைகளான- பொதியிடல் செயலாக்கம், அச்சிடுதல், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

‘பொதியிடல் , செயலாக்கம், அச்சிடுதல், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பற்றிய கொழும்பின் 38 வது சர்வதேச தொழில் கண்காட்சி சமீபத்திய காலங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் பரிய தொழில் விநியோக பதிவினை ஈட்டியுள்ளது. உலகளாவிய சில்லறை ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது- குறிப்பாக சர்வதேச சந்தைகளில் நுழைய விரும்பும் எங்கள் பொதியிடல் தொழில்துறையினருக்கு பாரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை தொழிற்துறையில் முக்கியமான மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் தொழில்துணைத் துறைகள் ஈ-கொமர்ஸில் ஏற்பட்டுள்ள எழுச்சிகள்; ஊடாக அதிக லாபம் ஈட்டுவதற்காக இந்திய மற்றும் ஆசிய-பசிபிக் சந்தைகளில்; பயணிக்கவுள்ளன.

இவ்வாண்டு; சர்வதேச தொழில் கண்காட்சியில் சீனா, ஹொங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கண்காட்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தத் துறைகளில் உள்ள 40 இந்திய நிறுவனங்கள் இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பு கண்காட்சியாளர்களாக திகழவுள்ளனர். 2016 ஆம் ஆண்டில், அனைத்து நாடுகளிலிருந்தும் 40 நிறுவனங்கள் பங்கேற்றன, ஆனால் இந்த ஆண்டு அது 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 38 இணைக்கப்பட்ட துணை தொழில் துறைகள் பங்கேற்கின்றன

உலக சந்தையில் இலங்கையின் அச்சிடுதல் மற்றும் பொதியிடல் ஆகியவை தர அடையாளத்தில் முக்கிய கூறுகளாக காணப்படுகின்றது. அத்துடன் பொதியிடல் எங்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்கையும் வகிக்கிறது. இதன் விளைவாக சர்வதேச பொதியிடல் மற்றும் பாதுகாப்பு தேவைகள் எங்கள் பொதியிடல் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதோடு புதுமைகளையும் உருவாக்குகிறது.

இலங்கை பொதியிடல் நிறுவனத்துடன் எனது அமைச்சு முதன்முறையாக பிராந்திய மட்டத்தில் சிறிய நடுத்தர தொழிற்துறையினருக்காக சேவை திட்டங்களை அறிமுகப்படுத்தின. இது அவர்களின் மதிப்பு சங்கிலியை வலுப்படுத்தியது. இதன் விளைவாக சிறிய நடுத்தர தொழிற்துறையினருக்கு பொதியிடல் துறையில் உள்வாங்க வாய்ப்பு ஏற்பட்டன. ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 40 சிறிய நடுத்தர தொழிற்துறைகள் பொதியிடல் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயிற்சியினை பெற்றன. அத்துடன் முதன்முறையாக, இலங்கை சிறிய நடுத்தர தொழிற்துறையினர் தங்கள் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் நேரடி ஆதரவைப் பெறுகின்றன’ என்றார் அமைச்சர்.

-ஊடகப்பிரிவு-

Related posts

Scheduled railway strike called off

Mohamed Dilsad

බැරල්වලට ඉන්දන නිකුත් නොකිරීමේ තීරණයක්

Editor O

Last male Sumatran rhino in Malaysia dies

Mohamed Dilsad

Leave a Comment