Trending News

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்

(UTVNEWS|COLOMB0) – சீனாவின் 70-வது ஆண்டு தேசிய தினத்தின் போது ஹாங்காங்கில் பெரும் வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் “சீன மக்கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன் 70-ம் ஆண்டு விழா, நேற்று அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

70-வது ஆண்டு விழா மிகவும் பிரமாண்டமான விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு பெருமளவு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டன

இந்த நிலையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிலும் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டது.

ஆனால் ஹாங்காங்கில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சீன தேசிய தினத்தை துக்க நாளாக கடைபிடித்து எதிர்ப்பு பேரணியை நடத்த ஜனநாயக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஹாங்காங் முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.

எனினும் திட்டமிட்டப்படி ஹாங்காங்கின் மத்திய நகரம் மற்றும் 6 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகளை அணிந்து, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒருசில இடங்களில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பொலிசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையிலான வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

Mohamed Dilsad

அரசியல் அமைப்பு சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தமை ஜனநாயக வெற்றி – பிரதமர்

Mohamed Dilsad

இணையத்தில் தீயாக பரவும் நடிகை சமந்தாவின் காணொளி!!

Mohamed Dilsad

Leave a Comment