Trending News

ரயில் தொழிற்சங்கம் – மஹிந்த தேசப்பிரிய சந்திப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கம் அதனை கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தமது கோரிக்கைகளுக்கு பதிலை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்றைய தினம்(07) கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

சமூக வலைத் தளங்களை கவனமாக பயன்படுத்தவும்

Mohamed Dilsad

சட்டத்தை கையிலெடுத்துள்ள இனவாதத்தேரர்களை கட்டுப்படுத்துங்கள். மன்னாரில் பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

Mohamed Dilsad

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment