Trending News

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

Lalith Weeratunga’s overseas travel ban lifted

Mohamed Dilsad

Migrant crisis: Seven die as boat sinks in Turkey’s Lake Van

Mohamed Dilsad

ගාල්ලේ ගින්නක්

Editor O

Leave a Comment