Trending News

இலங்கை கிரிக்கெட்டில் திலங்க எந்த பதவியும் வகிக்க முடியாது

(UTV|COLOMBO) – இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிர்வாகத்தில் எந்த வித பதவிகளையும் வகிக்க முடியாதென இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ உத்தியோகபூர்வமாக தடையை விதித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ திலங்க சுமதிபால எந்த குழுவினதும் எந்த கூட்டத்திலும் கலந்துகொள்வதை தடுக்குமாறும் தவிர்க்குமாறும் மற்றும் திலங்க சுமதிபால வாக்களிப்பதையும் கடந்த கால தலைவர் என்ற அடிப்படையில் செயற்படுவதையும் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவம் செய்வதையும் தடைசெய்யுமாறு அமைச்சர் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தான் நியமித்த குழுவின் அறிக்கை வெளியாகும் வரை முன்னர் திலங்க சுமதிபாலவிற்கு தடைவிதித்திருந்தார். தற்போது குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளதை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தடையை விதித்துள்ளார்.

Related posts

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

Mohamed Dilsad

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

Mohamed Dilsad

நாடு முழுவதும் சுவசரிய அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில்

Mohamed Dilsad

Leave a Comment