Trending News

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சேவை நிமித்தம் மற்றும் அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ்மா அதிபரினால் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன் அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

நீதிமன்றில் சரணடைய தயாராகும் உதயங்க வீரதுங்க

Mohamed Dilsad

பண்டிகைக்காலம் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

Mohamed Dilsad

“ஊறு ஜுவா” வின் சகாக்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது

Mohamed Dilsad

Leave a Comment