(UTV|COLOMBO) – தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (28) நாடளாவிய ரீதியிலுள்ள சகல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் , தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகள் வழமைப்போல இயங்கும் என்பதோடு, சிங்கள, ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் கவி அமைச்சு கூறியுள்ளது.
விசேட விடுமுறைக்குரிய பாடசாலை தினமானது, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தவேண்டுமெனவும் கல்வி அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.