Trending News

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 – 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை

(UTV|COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 தொடக்கம் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் ன வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் ஏனைய இடங்களில்100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனிடையே பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தொடை காலி, கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என்பதுடன் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ඩොලරයේ අද තත්ත්වය

Editor O

கா.பொ.த உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

Navy nabs a person with 100g of Kerala cannabis

Mohamed Dilsad

Leave a Comment