(UTV|COLOMBO) – தீர்வை செலுத்தாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 6000 சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவரை கொழும்பு சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மினுவங்கொட, கல்ஒலுவ பகுதியில் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 210,000 ரூபா பெறுமதியான சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர் சுங்க அதிகதாரிகளினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 1 ஆம் திகதி மினுவங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.