(UTV|COLOMBO) – சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் அதிக விலைக்கு எரிவாயுவை விற்கும் சமையல் எரிவாயு வர்த்தகர்கள் மீது சோதனை நடத்தி வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக முறைப்பாடுகளை அளிக்குமாறு நுகர்வோர் நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த முறைப்பாடுகளை 1977 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்க சந்தையில் சமையல் எரிவாயு பற்றாக்குறை சில நாட்களில் நீங்கும் என்று எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே 4,000 மெட்ரிக் டொன் சமையல் எரிவாயு கொள்கலன்களை நிறுவனம் வைத்திருக்கிறது, மேலும் 4,000 விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்று லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் ஜனக பதிரத்ன தெரிவித்தார்.
மேலும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிடிய கொழும்பு துறைமுகத்திற்கு எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.