(UTV|COLOMBO) – பல பிரிவுகளைச் சேர்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் ஜகத் சந்திரசிரி தெரிவித்திருந்தார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 64, 65,32,GA முதல் GZ மற்றும் HA முதல் HZ வரையிலான அனைத்து வாகனங்களுக்குமான ஒரு நாள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சில வகையான வாகனங்கள் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்வதால் ஒரு நாள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோப்புகளின் ஆய்வு முடிந்ததும், எதிர்காலத்தில் ஒரு நாள் சேவை தொடங்கப்படும் என்று ஆணையாளர் மேலும் தெரிவித்திருந்தார்.