(UTV|COLOMBO)- உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிராக, ‘சுரக்கிமு சிறிலங்கா’ என்ற அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரரினால் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று(30) முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளது.
பாகிஸ்தானின் இரண்டு மருத்துவ பல்கலைக்கழகங்களில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்கும் போது, பாகிஸ்தானினால் இலங்கைக்கு செலுத்தப்பட வேண்டிய 4000 அமெரிக்க டொலர்களை, உயர்கல்வி அமைச்சு செலுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.