(UTV|COLOMBO)- சேவையில் ஈடுபட்டுள்ள எந்தவொரு பாதுகாப்பு இராணுவ வீரருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் தமது வாக்கினை வழங்கும் நடவடிக்கை தவிர்ந்த வேறு எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட உரிமை இல்லை எனத் தெரிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுப்பெற்றுள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதனைபோல, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது புகைப்படங்களை பயன்படுத்த இடமளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் பக்க சார்ப்பின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.