(UTV|COLOMBO) -அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை குவித்துள்ளது.
பிரிஸ்பனில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி அடுத்தடுத்து சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் இலங்கை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
தனுஷ்க சானக்க 21 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் ஒரு ஓட்டத்துடனும், அவிஷ்க பெர்னாண்டோ 17 ஓட்டத்துடனும், குசல் பெரேரா 27 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல 5 ஓட்டத்துடனும், தசூன் சானக்க ஒரு ஓட்டத்துடனும், வனிந்து ஹசரங்க 10 ஓட்டத்துடனும், இசுறு உதான 10 ஓட்டத்துடனும், மலிங்க 9 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகான் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் பில்லி ஸ்டான்லேக், பேட் கம்மின்ஸ், அஷ்டோன் அகர் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.