(UTV|COLOMBO)- சர்வதேச ரீதியாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி (Jack Dorsey) அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த புதிய கொள்கை நவம்பர் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது, இது உலகளவில் அனைத்து தேர்தல் விளம்பரங்களுக்கும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அரசியல்வாதிகள் தவறான அறிக்கைகளை விளம்பரப்படுத்த அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய நிலைப்பாடு குறித்து பேஸ்புக்கில் அழுத்தத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த தடை பற்றிய செய்தி எதிர்வரும் 2020 இல் இடம்பெறவுள்ள அமெரிக்க தேர்தலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த கொள்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையில் ஜனாதிபதித் தேர்லில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.