Trending News

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வலியாம்னடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் மொணராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

Police investigation on property damage at Health Ministry

Mohamed Dilsad

Sebastián Piñera wins Chile’s presidential election

Mohamed Dilsad

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

Mohamed Dilsad

Leave a Comment