(UTVNEWS | COLOMBO) – தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த விடயங்களை கருதிற்கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கோரி சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.