Trending News

றக்பி உலகக்கிண்ணம் தென்னாபிரிக்காவிற்கு

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.

தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென்னாபிரிக்காஅணி 32 – 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி தொடரில் 20 அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதிப் போட்டிக்கு தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தகுதி பெற்றதுடன், போட்டி யொகோஹோமா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

தென்னாபிரிக்கா இதற்கு முன்னர் 1995 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ரக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுட்டெரிக்கும் வெயிலுக்கு 6 பேர் பலி

Mohamed Dilsad

UK goes to polls in general election

Mohamed Dilsad

Tense situation in Welikada Prison under control, 11 injured, 52 inmates transferred

Mohamed Dilsad

Leave a Comment