(UTV|COLOMBO) – இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிங்களவர்களும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் எனவும், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் முஸ்லிம்களின் பங்கு இல்லையென்றால் சில வேலை இன்னல்கள் உருவாக கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதையே ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி பொது செயலாளர் அப்துல் சத்தார் கருத்து தெரிவித்துள்ளார்.
யூ.டிவியின் ‘மக்கள் நம் பக்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.