(UTV|COLOMBO) – தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்று(05) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ள பட்டதாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணி முதல் போராட்டம் விஸ்தரிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என வேலை நிறுத்தத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.