Trending News

சாந்த அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட ஐக்கியத் தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சிலாபம் நகரில் சட்டவிரோதமாக கூடி துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டு அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு மாதாந்தத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையம் வந்து கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே கடந்த க்டோபர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்

Mohamed Dilsad

SLFP trade unions at CPC called off their strike

Mohamed Dilsad

பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோனசுக்கும் நிச்சயதார்த்தம்-முன்னாள் காதலி வருத்தம்

Mohamed Dilsad

Leave a Comment